என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அனிதா ராதாகிருஷ்ணன்"
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி சார்பில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர்ரொட்ரிக்கோ, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வேலம்மாள், ஊராட்சி செயலாளர் ஆனந்த் ரொட்ரிகோ, மாவட்ட தொ.மு.ச. பொருளாளர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜோசப் எடிசன் வரவேற்றார்.
கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ,கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை கொடுத்து தந்தை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்ற சமநிலையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு பெறுமை சேர்க்க சென்னை விமான நிலையம் உள்நாட்டு சேவைக்கு காமராஜர் பெயரை வைக்க அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் கூறியது, மண்டல கமிஷன் மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு வழிவகுத்து தந்தவர் கருணாநிதி.
தி.மு.க. ஆட்சியில் ரேசன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் எல்லோருக்கும் எல்லா பொருட்களும் கிடைத்தது. இன்று பொருளே இல்லை என்ற நிலை உள்ளது.
ஸ்டாலின் ஒருவரால் மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சியை தரமுடியும் விரைவில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் வரப்போகிறது. தேர்தலில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெசிபொண்ராணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜனகர், ராமஜெயம், வக்கீல்கள் ஜெபராஜ், சாத்ராக், கிருபாகரன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மந்திரமூர்த்தி, வர்த்தக அணி சீனிவாசன், ஒன்றிய துணைச் செயலாளர் அமிர்தலிங்கம், மாணவரணி துணை அமைப்பாளர்கள் பிரவின், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி அவைத்தலைவர் பிரினூஸ் ராயன் நன்றி கூறினார். #anitharadhakrishnan #mkstalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்